தத்தி தத்தி நடக்கும் குழந்தையின் பிஞ்சி பாதங்கள்....
பணியில் நனைந்து கொண்டிருக்கும் புல்வெளி....
துணை வேண்டி சத்தமிடும் தவளைகள்....
விளக்குகள் ஊர்வலம் செல்வது போல் வாகனங்கள்....
தெரு விளக்கையே சுற்றி சுற்றி வரும் ஈசல்கள்....
தேங்கி கிடக்கும் தண்ணீரில் மிதக்கும் உதிர்ந்த பூக்கள்....
தூரத்தில் கேட்க்கும் எனக்கு பிடித்த பாடல்....
என்னை சுற்றி இவ்வளவு இருந்தும்,
உன்னையே தேடும் என் விழிகள்.










