Monday, September 20, 2010



வானமகள் போட்டு வைத்தது  போல் வட்ட நிலா....
 பல நாள் எதிர்பார்த்து இன்று பூத்த என் ரோஜா செடி....
தத்தி தத்தி  நடக்கும் குழந்தையின் பிஞ்சி பாதங்கள்....
பணியில் நனைந்து கொண்டிருக்கும் புல்வெளி....
துணை வேண்டி சத்தமிடும் தவளைகள்....
விளக்குகள் ஊர்வலம் செல்வது போல் வாகனங்கள்....
தெரு விளக்கையே சுற்றி சுற்றி வரும் ஈசல்கள்....
தேங்கி கிடக்கும்  தண்ணீரில்  மிதக்கும் உதிர்ந்த பூக்கள்....
தூரத்தில் கேட்க்கும் எனக்கு பிடித்த பாடல்....
என்னை சுற்றி இவ்வளவு இருந்தும்,
உன்னையே தேடும் என் விழிகள்.


என் மன்னா …
என் தோழா …
என் காதலா ..
என் தலைவனே ..
என் தாயாக ..
என் எல்லமுமாகிய …
இதில் எதை வைத்து தொடங்குவேன் 

என் கவிதையை ? 
எல்லாம்   பொருந்துகையில்  !!!


பூக்கள் படர்ந்த மெத்தைமீது

காத்துக்கொண்டிருந்தேன்,


உன் மெத்தையாய் மாற....


காதலில் சொர்கம் தெரியுமோ ?

ஒவ்வொரு முறையும் பார்க்கிறேனே


உன் விரல் படும் வேலைகளில் .......


உன் சுமை வலிக்கவில்லையடி  ..

இடைவெளியே வெகுவாக வலித்தது...

Saturday, March 20, 2010

 


என் கைக்குட்டைக்கு

வேலை வந்தது...

உனது கரம் எட்டாத

தொலைவில் நான்....


எத்தனை முறை வந்தும்

வார்த்தையின்றி திரும்புகிறேன்..

இந்த கடல் அலைகளை போல்..
  

உன் முத்தச் சத்தமே

என் தாலாட்டானது!!



என் விடுதலையே

என்னை சிறையடைக்கிறது....



        

சிலிர்த்த என் செவிகளோடு 
 
உதடுகளும் சிலிர்க்கட்டும் ..
 
உன் காதலை அதனிடமும் சொல்.





"என்று வந்து உன்னை தந்து
என்னை மீட்பாய்?"
தினமும் அவளிடம் முறையிடும்
என் தலையணை!!!

Friday, February 5, 2010

 


முழு இடத்தையும் அடைத்துக்கொண்டு

கொஞ்சம் ஓரமாக இடம் கேட்கும்

என் முட்டாள் காதலா.....
 

என் உதடு புன்னகைக்காமல் இருக்க மறுக்கிறது,

அது என்ன செய்யும் பாவம் ?

இதயம் உன் நினைவுகளையே சுமந்தால்.


தொடங்கும் முன் முடிந்த

என் காதல் ....

முடிந்த பின்னும் தொடரும்....

நினைவுகளாக.

Monday, January 11, 2010




தனிமையை வெறுத்த நான்

இன்று தேடி செல்கிறேன்.....

உன் நினைவுகளின்

துணை இருப்பதால்..

Friday, January 8, 2010





உன் வாசம் நிறைந்த சட்டை...

ஆயுள் தண்டனை பெற்றது...

என்னிடம்.




இடைவெளி வேண்டும்...

முத்தங்களுக்கு இடையில்....

நமக்குள் அல்ல...!!



விலகிப்போகாதடி..... 

தண்டனை இரட்டிப்பாகும் .

Thursday, January 7, 2010




அவள் கூந்தலுக்கு மட்டும்

முத்தமிட மறந்துவிட்டேன் …

அதற்கு  தண்டனையாக

திண்ணைக்கு துணையாக்கினாள்  .



உன் தோழமையில் 

நனைந்து நனைந்து 

கரைந்தே போகிறேன் .....

அள்ள நீ இருக்கிறாய்

என்ற ஆணவத்தால் .




உன் கரம் என் இடையை தீண்டியதும்

மெலிகிரேன்  நான் ….

உன்னுள் அடங்க
.




தொலைக்காத ஒன்றை 

என் தேகத்தில் தேடும்

உன் உதடுகள் ….

எவ்வளவோ கிடைத்தும் ,

இன்னும் தொடரும் தேடல் ...!!!