Monday, January 11, 2010




தனிமையை வெறுத்த நான்

இன்று தேடி செல்கிறேன்.....

உன் நினைவுகளின்

துணை இருப்பதால்..

Friday, January 8, 2010





உன் வாசம் நிறைந்த சட்டை...

ஆயுள் தண்டனை பெற்றது...

என்னிடம்.




இடைவெளி வேண்டும்...

முத்தங்களுக்கு இடையில்....

நமக்குள் அல்ல...!!



விலகிப்போகாதடி..... 

தண்டனை இரட்டிப்பாகும் .

Thursday, January 7, 2010




அவள் கூந்தலுக்கு மட்டும்

முத்தமிட மறந்துவிட்டேன் …

அதற்கு  தண்டனையாக

திண்ணைக்கு துணையாக்கினாள்  .



உன் தோழமையில் 

நனைந்து நனைந்து 

கரைந்தே போகிறேன் .....

அள்ள நீ இருக்கிறாய்

என்ற ஆணவத்தால் .




உன் கரம் என் இடையை தீண்டியதும்

மெலிகிரேன்  நான் ….

உன்னுள் அடங்க
.




தொலைக்காத ஒன்றை 

என் தேகத்தில் தேடும்

உன் உதடுகள் ….

எவ்வளவோ கிடைத்தும் ,

இன்னும் தொடரும் தேடல் ...!!!